“உன்னால முடியாது…” கடையில் வேலை செய்யறியா?’ என வம்பு இழுத்த அமெரிக்க கும்பல்… லைவ் ஸ்ட்ரீமில் பதிலடி கொடுத்த இந்திய யூடியூபர்… வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 24, 2026

Spread the love

பிரபல இந்திய யூடியூபறான ‘பாசஞ்சர் பரம்பீர்’ தனது நண்பருடன் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த அமெரிக்க நபர்கள் அடங்கிய கும்பல் ஒன்று அவர்களிடம் வம்பு இழுக்கத் தொடங்கியுள்ளது. அதில் ஒருவன், தெற்காசியர்களை இழிவுபடுத்தும் நோக்கில், “நீங்கள் 7-எலவன் கடையில் வேலை செய்கிறீர்களா? எனது கடையில் மணி நேரத்திற்கு 12 டாலர் சம்பளத்தில் வேலை செய்கிறாயா?” என இனவெறியோடு நக்கலடித்துள்ளான்.

இதைக் கேட்டு சற்றும் பதற்றமடையாத யூடியூபர் பரம்பீர், அந்த நபரைக் கூர்ந்து கவனித்து, “உன்னால் என்னை வேலைக்கு அமர்த்தவே முடியாதுடா! முதலில் இந்த 12 டாலரை வைத்து நீ கழுத்தில் போட்டிருக்கும் போலியான டூப்ளிகேட் செயினைக் கழட்டிவிட்டு, ஒரிஜினல் செயின் வாங்கிப் போடு!” என்று லைவ் ஸ்ட்ரீமிலேயே மரண மாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

   

தான் அவமானப்படுத்த நினைத்த இந்திய யூடியூபரிடம் இருந்து எதிர்பாராதவிதமாக இப்படி ஒரு கெத்தான பதிலடி வந்ததும், அந்த அமெரிக்க நபர் எவ்விதப் பதிலும் பேச முடியாமல் ஆத்திரத்தில் அங்கிருந்து நழுவியுள்ளான். இச்சம்பவம் குறித்த வீடியோவை பரம்பீர் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், இந்தியர்களை இழிவுபடுத்த நினைத்த இனவெறியர்களுக்குச் சாட்டையடி கொடுத்த அவரது கெத்தான பதிலடியை நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.