“அடுத்த கட்டத்திற்கு போகப்போறேன்”…. பிறந்தநாளில் சூசகமாக சொன்ன தனுஷ்… அரசியலில் இறங்க ஸ்கெட்ச்….!

By Nanthini on புரட்டாதி 24, 2026

Spread the love

நடிகர் தனுஷ் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாக இணையத்திலும் திரையுலகிலும் பரவி வரும் செய்திகள் தற்போது தீவிர விவாதப் பொருளாக மாறியுள்ளன. கடந்த ஜூலை மாதம் தனது பிறந்தநாள் விழாவில் பேசிய தனுஷ், “நான் இப்படியே இருக்கக் கூடாது, அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும்; மக்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளைச் செய்யுங்கள்” என ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தது இந்த ஊகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் பிரவேசித்து முதலமைச்சராகிவிட்ட சூழலில், தனுஷுக்கும் அதே போன்ற அரசியல் ஆசை உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அவர் வெளிப்படையாக மறுக்காதது, இச்செய்தி உண்மைதானோ என்ற சந்தேகத்தை ரசிகர்களிடையே அதிகப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தேசிய விருது பெற்றுச் சென்னை திரும்பிய தனுஷிடம், விமான நிலையத்தில் செய்தியாளர்கள் “எப்போது கட்சி ஆரம்பிக்கப் போகிறீர்கள்?” என நேரடியாகக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எந்தவிதப் பதிலும் அளிக்காமல், சிரிப்பை மட்டுமே பதிலாக்கிவிட்டுத் தனது காரில் ஏறிச் சென்றார். அவரது இந்த மௌனமும் புன்னகையும் அவர் அரசியல் வருகையை உறுதிப்படுத்துகிறதா அல்லது தந்திரமாகத் தவிர்க்கிறாரா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எது எப்படியோ, திரைத் துறையில் உச்சத்தில் இருக்கும் தனுஷின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.