மகாராஷ்டிரா மாநிலம் பூனே மாவட்டம் மாவல் தாலுகாவிற்குட்பட்ட குஸ்கான் புத்ருக் கர்க்கே வஸ்தி பகுதியில் வசித்து வந்த தகடு ராமு வாகமாரே (45) என்பவனுக்கும், அவனது மனைவி காளி தாக்டு வாகமாரே (40) என்பவருக்கும் இடையே கடந்த திங்கள்கிழமை அன்று கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தகடு ராமு தனது மனைவியை ரத்தக் களறியாகும் வகையில் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலையைச் செய்த பிறகு அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி தலைமறைவானார் .
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த லோனாவாலா கிராமப்புற போலிஸார், 3 சிறப்புத் தனிப்படைகளை அமைத்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கர்நாடகாவுக்கு ரயிலில் தப்பியோட முயன்றக் கொலையாளி தகடு ராமுவை லோனாவாலா ரயில் நிலையத்தில் வளைத்துப் பிடித்த போலிஸார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
