ஐயோ காப்பாத்துங்க… அதிவேக தார் வாகனம் மோதி… ஸ்கூட்டர் ஓட்டுநர் தூக்கி வீசப்பட்ட திடுக்கிடும் சிசிடிவி காட்சி… ஜெய்ப்பூரில் நடந்த கொடூரம்…!

By Swetha on புரட்டாதி 24, 2026

Spread the love

ஜெய்ப்பூரின் ராஜா பார்க் பகுதியில் உள்ள வீர் ஹனுமான் மந்திர் சந்திப்பில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:30 மணியளவில் அதிவேகமாக வந்த கருப்பு நிற தார் வாகனம் ஒன்று, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவர் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

சம்பவ இடத்தில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த விபத்தின் காட்சிகள் பதிவாகியுள்ளன. அதில், வாகனம் மோதிய வேகத்தில் இருசக்கர வாகன ஓட்டி பல அடிகள் தூரத்திற்கு தூக்கி வீசப்படுவதும், விபத்தை ஏற்படுத்திய தார் வாகனத்தின் ஓட்டுநர் நிற்காமல் உடனடியாக அங்கிருந்து தப்பிச் செல்வதும் தெளிவாகத் தெரிகிறது.

   

https://twitter.com/IndiaToday/status/2102742741499408455/video/1

   

தகவலறிந்து வந்த காவல்துறையினர், காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய தார் வாகன ஓட்டுநரை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர்.