“தப்பு பண்ணிட்டேன்… நான் அப்படி சொல்லிருக்க கூடாது…” ஐ.ஐ.டி பாம்பே மாணவர் தற்கொலை… மகனை இழந்த தந்தையின் கண்ணீர்…. பெரும் சோகம்…!!

By Devi Ramu on புரட்டாதி 23, 2026

Spread the love

மும்பை ஐ.ஐ.டி-யில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சாஹில் வாகோடே என்ற மாணவர், கடந்த 18-ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிட் செமஸ்டர் தேர்வின் போது சாட் ஜிபிடி பயன்படுத்தியதாகக் கூறி, பேராசிரியர்கள் ஷிரீஷ் கேதாரே மற்றும் சூரியநாராயண தூல்லா ஆகியோர் சாஹிலைக் கடுமையாகச் சாதி ரீதியாகப் பேசிச் சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த மூன்று மாதங்களாக அப்பேராசிரியர்கள் சாஹிலை மனரீதியாகக் கொடுமைப்படுத்தியதோடு, “உன் மீது பொய் வழக்குகளைப் போட்டு வாழ்க்கையை சீரழித்து விடுவோம்” என மிரட்டியதாகவும், இதனால் ஏற்பட்டக் கடுமையான மன அழுத்தத்திலேயே சாஹில் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது தந்தை ரவீந்திர வாகோடே போலிஸில் புகார் அளித்துள்ளார்.

   

இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஐ.ஐ.டி மாணவர்கள் பேராசிரியர்களைக் கைது செய்யக் கோரி வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சூரியநாராயண தூல்லா டீன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். “என் மகன் திறமையான மாணவன். அவனைச் சாதி வெறியால் சித்திரவதை செய்து கொன்றுவிட்டார்கள். காரணமான பேராசிரியர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

   

“அவன் பெரும் வேதனையில் இருந்தான். ‘கொஞ்சம் பொறுத்துக்கொள், இதற்குப் பிறகு உன் வாழ்க்கையே நன்றாக இருக்கும்’ என்று அவனிடம் பொறுமையாக இருக்கும்படி கூறினேன். ஆனால், அவனிடம் அப்படிச் சொன்னதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு” எனக் கதறித் துடித்துள்ளார் எனக் கூறி சாஹிலின் தந்தை கதறும் சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.