“மேடம் இது எங்க வாங்குனீங்க…?” வாங்கிய 3 நாட்களில் பறந்துபோன லேட்டஸ்ட் ஐபோன்… ஈ-ரிக்ஷாவில் ஆன்லைன் பேமெண்ட் செய்த பெண்ணிடம் கைவரிசை…. அதிர்ச்சி சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 23, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியைச் சேர்ந்த சுபி பண்டாரி என்ற பெண், புதிதாக வாங்கி 3 நாட்களே ஆன தனது விலைமதிப்பற்ற ஐபோன் 18 புரோ போனுடன் ஈ-ரிக்ஷாவில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள், சுபி பண்டாரியிடம் போனின் மாடலைப் பற்றிப் பேச்சுக் கொடுத்து விசாரித்துள்ளனர். அந்தப் பெண் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தத் தனது போனைப் பயன்படுத்திய அந்த நொடியில், மர்ம நபர்கள் இருவரும் மின்னல் வேகத்தில் போனைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.

   

வாங்கி 3 நாட்களே ஆன புதிய ஐபோனை நடுரோட்டில் பறிகொடுத்த சுபி பண்டாரி மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக போலிஸில் புகார் அளித்தனர். அப்பகுதியில் போலிஸ் ரோந்து இல்லாததே இதுபோன்ற துணிச்சலான கொள்ளைச் சம்பவங்களுக்குக் காரணம் என பொதுமக்கள் கொந்தளிக்கும் நிலையில், போலிஸார் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஹெல்மெட் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.