“வா தம்பி விளையாடலாம்…” 8 வயது சிறுவனை சீரழித்த வாலிபர்கள்… வலி தாங்க முடியாமல் பெற்றோரிடம் கதறி அழுத மகன்…. பகீர் பின்னணி…!!

By Devi Ramu on புரட்டாதி 23, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் பல்லநாடு மாவட்டம் முப்பல்லா மண்டலத்திற்குட்பட்ட சாகண்டபாலெம் கிராமத்தில், 8 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த 2 வாலிபர்கள், அச்சிறுவனை வெளியே விளையாட வரச்சொல்லி ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.

அழைத்துச் சென்ற இடத்தில், அந்த 2 வாலிபர்களும் சேர்ந்து 8 வயது சிறுவனைக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்துள்ளனர். வேதன தாங்க முடியாமல் கதறி அழுதபடி வீட்டிற்கு வந்த சிறுவன், தனக்கு நேர்ந்த கொடூரத்தைத் தாயிடம் கூறி அழுதுள்ளான்.

   

இதனைக் கேட்டு உறைந்துபோன தாய், உடனடியாக போலிஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலிஸார் 2 வாலிபர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காகக் குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.