BREAKING: இடைத்தேர்தல் முடிந்த கையோடு CM விஜய் எடுத்த அதிரடி முடிவு… அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு….!

By Nanthini on புரட்டாதி 22, 2026

Spread the love

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் முடிந்த கையோடு, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்த தமிழ்நாடு அரசு தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பான முதற்கட்ட ஆயத்தப் பணிகளை உடனே தொடங்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தேர்தலை வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் மொத்தம் நான்கு கட்டங்களாக நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளைக் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.

பொதுமக்களின் அன்றாடத் தேவைகளான நியாயவிலைக் கடைகள் (ரேஷன் கடைகள்), கூட்டுறவு வங்கிகள் மற்றும் விவசாயக் கடன் சங்கங்கள் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் இந்தக் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தின் கீழ்தான் இயங்கி வருகின்றன. எனவே, இச்சங்கங்களுக்கு ஜனநாயக முறையில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது நிர்வாகத்தை மேலும் செம்மைப்படுத்தவும், அரசு நலத்திட்டங்களை மக்களுக்கு விரைவாகக் கொண்டு சேர்க்கவும் வழிவகுக்கும். இதனையொட்டி மாவட்ட வாரியாக அனைத்துச் சங்கங்களின் முழுமையானத் தரவுகளைச் சேகரிக்கும் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.