நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கடை ஒன்றின் சிசிடிவி கேமராவில் பதிவான பதறவைக்கும் விபத்து வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிவேகமாக வந்த டம்பர் டிரக் ஒன்று, சாலையில் சென்று கொண்டிருந்த பிக்-அப் வேன் மீது லேசாக உரசியதுடன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த எல்லைச் சுவரில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது சுவருக்கு மிக அருகில் நின்றுகொண்டிருந்த பாதசாரி ஒருவர், வெறும் இரண்டு அடி இடைவெளியில் நூலிழையில் உயிர்தப்பினார். நடுரோட்டில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநரின் கவனக்குறைவே இந்த விபத்திற்குக் காரணம் என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
