“பாப்பா இங்க வா…” ஸ்டேஷனரி பொருட்கள் வாங்க சென்ற 11 வயது சிறுமியை கடைக்குள் அழைத்து சென்ற டெய்லர்… ஆசையாக பேசி சீரழித்த அவலம்…. பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 21, 2026

Spread the love

டெல்லியில், இரவு நேரத்தில் ஸ்டேஷனரி பொருட்கள் வாங்குவதற்காக வெளியே சென்ற 11 வயது சிறுமியை, தையல் கடைக்காரர் ஒருவர் ஆசைகாட்டித் தனது கடைக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள டெல்லி காவல் துறையினர், குற்றத்தில் ஈடுபட்ட மக்க்ஸூத் என்பவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் செய்தி வெளியாகியுள்ள நிலையில், “11 வயது சிறுமி ஸ்டேஷனரி பொருட்கள் வாங்கக்கூட பாதுகாப்பாகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது; இந்த நகரம் குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது” எனக் கூறி நெட்டிசன்கள் தங்களது கடும் கண்டனங்களையும் ஆதங்கத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.