அடச்சீ… நீயெல்லாம் ஒரு மனுஷனா?… 16 வயது சிறுமியை மிரட்டி… கடத்தி பாலியல் வன்கொடுமை… பக்கத்து வீட்டு நபர் செய்த கொடூரம்… மத்திய பிரதேசத்தில் பரபரப்பு…!

By Swetha on புரட்டாதி 21, 2026

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பயிற்சி வகுப்புக்குச் சென்று கொண்டிருந்த 16 வயது சிறுமி, அவரது பக்கத்து வீட்டுக்காரரால் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின்படி, இந்தச் சம்பவம் செப்டம்பர் 19 அன்று மாலை சுமார் 6 மணியளவில் நடந்துள்ளது. அந்த மாணவி தனது வழக்கமான பயிற்சி வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்தபோது, பல்வீர் என அடையாளம் காணப்பட்ட அவரது பக்கத்து வீட்டு நபர் மோட்டார் சைக்கிளில் வந்து அவரை வழிமறித்துள்ளார்.

அப்போது, தன்னுடன் வராவிட்டால் மாணவியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவதாக பல்வீர் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மிரட்டலால் அச்சமடைந்த சிறுமியை, பல்வீர் தனது பைக்கில் வலுக்கட்டாயமாக ஏற்றி ஸ்ருதி அபார்ட்மென்ட்டில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்தச் சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

   

https://twitter.com/nextminutenews7/status/2101989247494590598/video/1

   

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது குடும்பத்தினரும் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பல்வீரைக் கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.