30 லட்சத்திற்கும் அதிகமான யூடியூப் சந்தாதாரர்களைக் கொண்டு இணையத்தில் புகழ்பெற்ற இந்திய லாரி ஓட்டுநரும் விளாகருமான ராஜேஷ் ரவானி, தனது லாரி கேபினை அதிநவீன முறையில் மாற்றியமைத்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீண்ட தூரப் பயணங்களின் போது தனக்கு அசதி ஏற்படாமல் இருக்க, தனது லாரியின் ஓட்டுநர் இருக்கையை 180 டிகிரி சுழலும் வகையிலும், அமரும் இடத்தை பஞ்சு மெத்தை சோஃபா போலவும் மாற்றியுள்ளார். மேலும், லாரியின் முன் பக்கக் கண்ணாடிக்கான திரைகளை ரிமோட் கண்ட்ரோல் பொத்தான் மூலம் தானாக இயங்கும் வகையில் அமைத்துள்ளார்.
https://www.instagram.com/reel/DdYStPYKbby/?utm_source=ig_web_copy_link&stkn=NTc4MTIwNjQ2YQ==
நெடுஞ்சாலைகளில் லாரியை நிறுத்தித் சுவையான உணவுகளைச் சமைப்பது, சக ஓட்டுநர்களுடன் பேசுவது எனத் தனது அன்றாட லாரி வாழ்க்கை பதிவுகள் மூலம் பிரபலமான இவரை தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா முன்னரே பாராட்டியிருந்தார். தற்போது இவரது இந்த நவீன லாரி கேபின் வீடியோவைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் அவரது உழைப்பையும் புதுமையான யோசனையையும் பாராட்டி வருகின்றனர்.
