“கள்ளக்காதலன், 16 வயது மகனுடன் சேர்ந்து ஸ்கெட்ச்…” தூங்கிக்கொண்டிருந்த கணவரை குத்தி கொன்ற மனைவி…! பெரும் பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 20, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ மோகன்லால்கஞ்ச் பகுதியில் உள்ள கால்வாய் மதகின் அடியில் மரப்பெட்டி ஒன்றிற்குள் ஆண் சடலம் கிடப்பதாகச் செப்டம்பர் 17 அன்று போலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. சடலத்தைக் கைப்பற்றிய போலிஸார், அப்பகுதியில் இருந்த சுமார் 180 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, மின்சார ஆட்டோவில் அந்த மரப்பெட்டியைக் கடத்திச் சென்றது தெரியவந்தது.

விசாரணையில், கொல்லப்பட்டவர் ராம் கிஷோர் வால்மீகி என்பதும், அவரை அவரது இரண்டாவது மனைவி சுபியா பானு (35), தனது கள்ளக்காதலன் முன்னா (52), நண்பர் முகமது இக்பால் (40) மற்றும் தனது 16 வயது மகனுடன் சேர்ந்து கொலை செய்ததும் அம்பலமானது. சுபியாவிற்கு முன்னாவுடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ராம் கிஷோர் தனது முதல் மனைவியான கவிதா தேவியுடன் மீண்டும் நெருங்கிப் பழகி, அவருக்குப் பண உதவி செய்யத் தொடங்கினார்.

   

இதனால் ஆத்திரமடைந்த சுபியா பானு, கடந்த செப்டம்பர் 14-15 நள்ளிரவில் ராம் கிஷோர் உறங்கிக் கொண்டிருந்தபோது, கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தார். பின்னர் சடலத்தை மரப்பெட்டியில் அடைத்து, மின்சார ஆட்டோவில் எடுத்துச் சென்று 20 கி.மீ தொலைவில் உள்ள கால்வாயில் வீசியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகச் சுபியா பானு, அவரது கள்ளக்காதலன் உட்பட 4 பேரையும் போலிஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.