அவள் முக்கியமா நான் முக்கியமா?… முதல் மனைவியுடன் பேசியதால்… கடுப்பாகி கள்ளக்காதலனுடன் சேர்ந்து… கணவரை ஸ்கெட்ச் போட்டுக் தூக்கிய கொடூர மனைவி… லக்னோவில் அரங்கேறிய சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 20, 2026

Spread the love

லக்னோவில் தனது முதல் மனைவியுடன் கணவர் தொடர்ந்து தொடர்பில் இருந்ததால் ஏற்பட்ட தகராறில், மனைவி தனது கள்ளக்காதலன் மற்றும் அவருடைய கூட்டாளியின் உதவியுடன் கணவரைக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடூரமாகக் கொல்லப்பட்ட நபரின் உடல் ஒரு டிரங்க் பெட்டியில் அடைக்கப்பட்டு, வீட்டின் அருகே உள்ள ஒரு கால்வாய்க்குப் பக்கத்தில் வீசப்பட்டிருந்தது.

இந்தக் கொலை வழக்கு தொடர்பாக உயிரிழந்தவரின் மனைவி, அவரது கள்ளக்காதலன் மற்றும் கள்ளக்காதலனின் கூட்டாளி ஆகிய மூவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், இந்தச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக மனைவியின் 16 வயது சிறுவனையும் காவல்துறையினர் தீவிர விசாரணைக்குப்பின் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

   

https://twitter.com/IndiaToday/status/2101235699265774033/video/1

   

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கால்வாய் அருகே டிரங்க் பெட்டி ஒன்று கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாகத் திட்டமிட்டு இந்த எல்லைமீறிய குற்றச் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்தது.