ஏய்… அந்தப் பொண்ணை ஃபாலோ பண்ணுடா… இரவில் பெண் வேடமிட்டுச் சென்ற வாலிபர்… டெல்லி வீதியில் நேர்ந்த பயங்கரம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

By Swetha on புரட்டாதி 19, 2026

Spread the love

டெல்லியில் இரவில் தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கு என்ன மாதிரியான சூழல் நிலவுகிறது என்பதை நேரில் அனுபவித்துப் பார்க்க அந்த இளைஞர் முடிவு செய்தார். அதற்காக அவர் பெண்களுக்கான ஆடை, ஒப்பனை அணிந்து, முகத்தை துப்பட்டாவால் மறைத்தபடி நள்ளிரவில் ஸ்கூட்டியில் சென்றார். டெல்லி வீதிகளில் அவர் சுமார் இரண்டு மணி நேரம் மேற்கொண்ட இந்த பயணத்தை வீடியோவாகப் பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்த இரண்டு மணி நேரப் பயணத்தின் போது அவருக்குப் பல அச்சுறுத்தும் அனுபவங்கள் ஏற்பட்டன. அவர் வீட்டில் இருந்து கிளம்பியது முதலே சாலையிலிருந்த ஆண்கள், பெட்ரோல் பங்கில் இருந்தவர்கள் எனப் பலரும் அவரைத் தொடர்ச்சியாகத் முறைத்துப் பார்த்துள்ளனர். மேலும் சிலர் அவரைப் பின்தொடர முயன்றதாகவும், ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் அவரது ஸ்கூட்டிக்குக் குறுக்காக வாகனத்தை இயக்கி அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கார், பைக், ஆட்டோ எனப் பலதரப்பட்ட வாகனங்களில் வந்தவர்களும் அவரைப் பின்தொடர முயன்றதால் அச்சமடைந்த அவர், சோதனையைப் பாதியிலேயே முடித்துக் கொண்டார்.

   

https://www.instagram.com/reel/DdWhNe0z3DF/?utm_source=ig_web_button_share_sheet

   

இந்த அனுபவத்திற்குப் பிறகு பேசிய அந்த இளைஞர், “இரவில் பெண்கள் தனியாக வெளியே செல்வது முற்றிலும் பாதுகாப்பற்றது; பெண்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் கடினமானது” என்று வேதனையுடன் குறிப்பிட்டார். இணையத்தில் வைரலான இந்த வீடியோ 1.5 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ள நிலையில், டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் மீண்டும் கடுமையான விவாதங்களைக் கிளப்பியுள்ளது.