உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் பகேடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலாடியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆபித் அலி. இவருக்கும் இவரது அண்டை வீட்டாருக்கும் இடையே லேசான தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆபித் அலியை அவரது வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்த அண்டை வீட்டார், தடி மற்றும் இரும்பு கம்பிகளால் அவரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட ஆபித் அலி கொடூரமாகத் தாக்கப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடிச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பரேலி மற்றும் உ.பி காவல்துறையைக் குறிப்பிட்டு இணையவாசிகள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
