“புது குழந்தை பெத்துட்டு உன்னை தூக்கி எறிவேன்…” கணவரை பழிவாங்க 3 வயது மகனை சித்திரவதை செய்த தாய்…. இணையத்தில் தீயாய் பரவும் சர்ச்சை வீடியோ….!!

By Devi Ramu on புரட்டாதி 19, 2026

Spread the love

ரஷியாவில் 31 வயதான தாய் ஒருவர், தனது சொந்தச் சிறுவனிடம் “உன் தந்தை உன்னை விட்டுவிட்டு வேறு பெண்ணுடன் சென்றுவிட்டார். நானும் உன்னை விட்டுவிட்டு வேறு ஆணுடன் சென்று புதிய குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு உன்னைத் தூக்கி எறிந்துவிடுவேன்” எனக் கூறிப் பயமுறுத்தும் வீடியோவை எடுத்துத் தன் கணவனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வீடியோவில், தாய் கூறிய கொடூரமான வார்த்தைகளைக் கேட்டு அந்தச் சிறுவன் அழக்கூட முடியாமல், பயத்தில் தலையை மட்டும் அசைத்துக்கொண்டிருந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி ரஷியா முழுவதையும் உலுக்கியது. தன் கணவனுக்குப் பொறாமையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தவே அந்த தாய் இந்த கொடூர நாடகத்தை நடத்தியது தெரியவந்தது.

   

ஏற்கனவே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் இடைக்காலத் தண்டனை பெற்றிருந்த அந்தப் பெண், மீண்டும் அதே கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து உடனடியாகக் களமிறங்கிய ரஷிய போலிஸார், அந்த தாயிடமிருந்து அவரது 3 குழந்தைகளையும் மீட்டு அரசுச் சமூகப் பராமரிப்பு மையத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர்.