மேல்மா சிப்காட் விவகாரத்தில் அதிரடி திருப்பம்…. நடு இரவில் வெளியான முக்கிய அறிவிப்பு…. கடைசி நிமிடத்தில் ரத்தான அரசாணை….!

By Nanthini on புரட்டாதி 19, 2026

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அமையவிருந்த மேல்மா சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அறிவிக்கையை தமிழ்நாடு அரசு திடீரென திரும்பப் பெற்றுள்ளது. மேல்மா உட்பட 11 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3,000 ஏக்கர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு விவசாயிகள் மற்றும் உள்ளூர் அமைப்புகள் தரப்பிலிருந்து தொடர்ச்சியாகக் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. நில உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், விவசாயிகள் நடத்தி வந்த தொடர் போராட்டங்களின் தீவிரத்தை உணர்ந்து இந்த நில எடுப்பு அரசாணை தற்போது அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

முன்னதாக, தேர்தல் அரசியலில் களமிறங்குவதற்கு முன்பே தமிழக வெற்றித் கழகம் இத்திட்டத்திற்கு எதிராகத் தனது வலுவான குரலைத் பதிவு செய்திருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில், விவசாய நிலங்களை அழித்து சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் முயற்சிகளைக் கண்டித்து சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து, அவர்களின் வாழ்வாதார உரிமைகளுக்காகத் தவெக என்றும் துணைநிற்கும் என உறுதியளித்து ஆதரவு தெரிவித்திருந்தனர்.

   

இருப்பினும், சமீபத்தில் செய்யாறு தொழிற்பேட்டை விரிவாக்கப் பணிகளுக்காக மேல்மா கிராமத்தில் 22.1600 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்துவது தொடர்பான புதிய அறிவிப்பு அரசிதழில் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த எதிர்க்கட்சிகளும், விவசாய இயக்கங்களும் தவெக அரசின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எதிர்த்த திட்டத்தையே தற்போது செயல்படுத்துவது முரண்பாடாக உள்ளதாகக் கேள்விகள் எழுப்பப்பட்டு, மீண்டும் போராட்டங்கள் தீவிரமடையும் சூழல் உருவானது.

   

பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கொந்தளிப்பைத் தொடர்ந்து, செப்டம்பர் 1-ம் தேதி வெளியிடப்பட்ட மேல்மா கிராம சிப்காட் நில எடுப்பு அறிவிக்கையை ரத்து செய்வதாகத் தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடுக்கப்பட்டுள்ள இந்த வாபஸ் நடவடிக்கை, நில உரிமையாளர்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதே முதன்மை இலக்கு என்பதை இ முடிவு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.