அடச்சீ… வண்டியை நிறுத்துடா… அலறிய பெண்… போனட்டில் தொங்கவிட்டு காதலன் ஓட்டம்… மிரள வைக்கும் அதிர்ச்சி வீடியோ… லக்னோவை உலுக்கிய நடுநடுங்கும் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 16, 2026

Spread the love

லக்னோவின் ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்கா அருகே பெண் ஒருவர் காரின் முன்பகுதியில் தூக்கிச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலன் வேறொரு பெண்ணுடன் காரில் இருப்பதைக்கண்டு அப்பெண் வாகனத்தை மறிக்க முயன்றபோது ஏற்பட்ட தகராறில், காரை இயக்கிய நபர் வாகனத்தை வேகமாக முடுக்கியுள்ளார். இதில் அப்பெண் காரின் முன்பகுதியில் விழுந்த நிலையிலும் கார் நிறுத்தப்படாமல் சிறிது தூரம் இயக்கிச் செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

காரின் முன்பகுதியில் இருந்து அப்பெண் கீழே விழுந்த பிறகும் இந்தச் சம்பவம் மேலும் தீவிரமடைந்தது. காரை ஓட்டிவந்த நபர், கீழே விழுந்த அப்பெண் மீது மீண்டும் காரை ஏற்றிச் கொல்ல முயல்வது போல் வாகனத்தை அவரை நோக்கி இயக்கியுள்ளார். பின்னர், அங்கிருந்து அந்த நபர் காரை வேகமாக ஓட்டித் தப்பிச் சென்றுவிட்டார். இதில் காயமடைந்த அப்பெண்ணைச் சுற்றி அங்கிருந்த பொதுமக்கள் கூடி, உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

   

https://twitter.com/HateDetectors/status/2100158752435351807/video/1

   

இச்சம்பவத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ஆதாரங்கள் மற்றும் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சம்பவத்தின் முழு பின்னணியைக் கண்டறியவும் தப்பி ஓடிய ஓட்டுநரைப் பிடிக்கவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.