ஐயோ பாவம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள்… விளையாடச் சென்ற இடத்தில் கிணற்றில் மூழ்கி பலி… நெஞ்சை உலுக்கிம் சோகம்…!

By Swetha on புரட்டாதி 16, 2026

Spread the love

அசோக்நகர் மாவட்டம் விக்ரம்பூர் கிராமத்தில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உரைய வைத்துள்ளது. பல்வீர் குஷ்வாஹாவின் மகன்களான தேவ் (9), திரிதேவ் (7), மகாதேவ் (6) மற்றும் பிரியான்ஷ் (4) ஆகிய நான்கு சிறுவர்களும் விளையாடச் சென்ற இடத்தில், கிராமத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு திறந்தவெளிக் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

காலையிலிருந்தே பேத்தி மற்றும் பேரன்களைக் காணாமல் பாட்டி தீவிரமாகத் தேடி வந்த நிலையில், காவல்துறையின் உதவியுடன் கிணற்றிலிருந்து நான்கு குழந்தைகளின் சடலங்களும் மீட்கப்பட்டன. 10 வயதிற்கும் குறைவான நான்கு பிஞ்சுக் குழந்தைகளும் ஒரே நேரத்தில் உயிரிழந்தது அப்பகுதி மக்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

   

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு வெளிச்சங்களும் ஒரே கணத்தில் அணைந்துபோன நிலையில், நான்கு குழந்தைகளின் பாடை ஒரே நேரத்தில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டக் காட்சி பார்ப்போரின் நெஞ்சைப் பிளப்பதாக இருந்தது. பிள்ளைகளைப் பறிகொடுத்து தவிக்கும் அந்தப் பெற்றோரின் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இறைவனடி சேர்ந்த அந்தக் குழந்தைகளின் ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி.