“என் காதலி தான் சார்…” பைக்கில் இருந்த மூட்டை…. திறந்து பார்த்து அதிர்ந்து போன போலீஸ்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!!

By Devi Ramu on புரட்டாதி 15, 2026

Spread the love

மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 18-ல் நள்ளிரவில் போலிஸார் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்தி போலிஸார் சோதனை செய்தனர்.

அப்போது அந்த பைக்கின் பின்புறத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு பெரிய பிளாஸ்டிக் மூட்டையைக் கண்டு சந்தேகமடைந்த போலிஸார் அதனைப் பிரித்துப் பார்த்தபோது, உள்ளே 19 வயது இளம்பெண்ணின் சடலம் இருந்தது தெரியவந்து போலிஸார் உறைந்துபோயினர். உடனடியாக பைக் ஓட்டிவந்த 21 வயது வாலிபராய் போலிஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

   

விசாரணையில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண் தனது காதலி என்றும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் விவகாரம் மற்றும் சந்தேகத்தின் காரணமாக ஏற்பட்ட தகராறில் அவரைக் கொலை செய்து உடலை மறைக்க எடுத்துச் சென்றதாகவும் குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளான். இச்சம்பவம் குறித்து புருலியா போலிஸார் கொலை வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.