டெல்லியில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் பெண் ஒருவர் அழுகு சாதனச் சேவைகளை முழுமையாக பெற்றுள்ளார். சேவைகள் முடிந்த பிறகு பார்லரின் முதிய பெண் உரிமையாளர் அதற்கான கட்டணத்தைக் கேட்டபோது, அந்தப் பெண் பணம் கொடுக்க மறுத்துத் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், தான் ‘டெல்லி போலிஸ் அதிகாரி’ என்று கூறி அந்த முதிய பெண்ணைப் பயமுறுத்தி மிரட்டியுள்ளார். இந்தச் சம்பவம் முழுவதும் பார்லரில் இருந்த கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்தப் பெண் உண்மையிலேயே போலிஸ் துறையில் பணியாற்றுகிறாரா அல்லது போலிஸ் அதிகாரியைப் போல ஆள்மாறாட்டம் செய்து அராஜகத்தில் ஈடுபட்டாரா என்பது குறித்து டெல்லி போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலிஸாகவே இருந்தாலும் பெற்ற சேவைக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று இணையத்தில் மக்கள் தங்களது கொந்தளிப்பைப் பதிவிட்டு வருகின்றனர்.
