கசியாபாத் ராஜ் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், செல்லப் பிராணியான நாயை மின்தூக்கியில் அழைத்துச் செல்வது தொடர்பான தகராறு இரண்டு பெண்களுக்கு இடையே கடுமையான கைக்கலப்பாக மாறியது. இந்த மோதல் தொடர்பான விடியோ அங்குள்ள சிசிடிவி கெமராக்களில் பதிவாகி, தற்போது இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான பள்ளி ஆசிரியை, மற்றொரு பெண் தன்னை நாய் அடக்கும் தடியால் தாக்கியதாகவும், கன்னத்தில் அறைந்து அநாகரிகமாகப் பேசியதாகவும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். நாயை லிஃப்டில் அழைத்துச் செல்வது தொடர்பாக எழுந்த சிறிய வாக்குவாதமே இந்த அளவுக்கு வன்முறையாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
https://www.instagram.com/reel/DdQnd0RDSkl/?utm_source=ig_web_button_share_sheet
இச்சம்பவம் குறித்து நந்தகிராம் உதவி ஆணையர் ஜியாவுதீன் அகமது தெரிவிக்கையில், பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் என்சிஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இச்சம்பவத்தில் இரண்டு பெண்களின் பங்களிப்பு குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
