மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத் ஜாம்வால் சிறப்புத் தரிசனம் செய்தார். பாரம்பரிய வெள்ளை உடையில் வருகை தந்த வித்யுத் ஜாம்வால், விநாயகருக்கு ஆர்த்தி எடுத்ததுடன், சங்கு ஊதியும் உடுக்கை அடித்தும் தனது பக்தியை வெளிப்படுத்தினார். இந்த ஆன்மீகக் காட்சி அங்கிருந்த பக்தர்களையும் சமூக வலைதளப் பயனர்களையும் பெரிதும் கவர்ந்து வைரலாகி வருகிறது.
லால்பாக் சா ராஜா சர்வஜனிக் கணேசோத்சவ் மண்டல் தனது 93-வது ஆண்டைக் கொண்டாடும் இந்த விழாவில், இம்முறை உஜ்ஜைனி மகாகாலேஷ்வர் கோயிலில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் சூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
