ஐயோ… அடிக்காதீங்கடா எங்களை விட்டுடுங்க… பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்… வேடிக்கை பார்த்த பொதுமக்கள்… இணையத்தைக் கலக்கும் பகீர் வீடியோ…!

By Swetha on புரட்டாதி 12, 2026

Spread the love

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள பதாார்த்தா கிராமச் சந்தைப் பகுதியில், இரு பெண்களுக்கும் சில உள்ளூர் ஆண்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு பகிரங்க மோதலாக மாறியது. இந்தச் சம்பவத்தை அங்கே இருந்த சிலர் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட, அது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்தச் சாலைப்பக்க மோதலின் போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் இரு பெண்களையும் எட்டி உதைத்தும் தாக்கியும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். சுற்றி ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோதும், யாரும் அவரைத் தடுக்க முன்வரவில்லை. இச்சம்பவம் பொதுவெளியில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

   

https://twitter.com/HateDetectors/status/2098750871379345653/video/1

   

இதுகுறித்துத் தகவலளித்த பாத்ரி காவல் நிலைய அதிகாரி ரவீந்திர குமார், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகவும், பாதிக்கப்பட்ட பெண்கள் முன்னர் பேருபூர் காவல் சாவடியில் புகார் அளித்திருந்ததாகவும் தெரிவித்தார். இணையத்தில் வைரலாகும் வீடியோவைக் கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காணும் பணிகளில் காவல்துறை ஈடுபட்டுள்ளதுடன், விசாரணைக்குப் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.