“கண்ணில் மிளகாய் பொடி தூவி…” ஜெயிலருக்குத் துப்பாக்கிச் சூடு… தப்பி ஓட வெறிச்செயலில் ஈடுபட்ட கைதி…. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 12, 2026

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் ரைய்சென் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆபத்தான கைதியான நீலேஷ் தாகூர் என்பவன், சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல நள்ளிரவில் திடுக்கிடும் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளான். காவலில் இருந்த சிறை வார்டன் திக்விஜய் சிங் தோமர் என்பவரின் கண்ணில் திடீரென மிளகாய் பொடியை தூவி நிலைகுலைய வைத்துள்ளான்.

அதுமட்டுமன்றி, தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து காவலாளி தோமரை நோக்கிச் சுட்டுவிட்டுத் தப்பியோட முயன்றுள்ளான். ஆனால், உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து கடும் ரத்தப்போக்கு ஏற்பட்டபோதிலும், தனது மன தைரியத்தை விடாத காவலாளி தோமர், அந்தப் பயங்கரவாதக் கைதியைத் தப்பிச் செல்ல விடாமல் போராடிப் பிடித்துள்ளார்.

   

இச்சம்பவம் நடந்து 9 நாட்களுக்குப் பிறகு, சிறைக்குள் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தின் முழு சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பாதுகாக்கப்பட்ட சிறைச்சாலைக்குள் கைதிக்குத் துப்பாக்கி மற்றும் மிளகாய்ப் பொடி கிடைத்தது எப்படி, இதற்குச் சிறை ஊழியர்கள் யாராவது உடந்தையாக இருந்தார்களா என்ற கோணத்தில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.