கேஸ் சிலிண்டருக்கு பின்னால் மறைந்திருந்த எமன்…. சமையலறையில் நடந்த பேரதிர்ச்சி… இளம்பெண் பரிதாப பலி….!

By Nanthini on புரட்டாதி 12, 2026

Spread the love

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கடக்கால் அருகே உள்ள சாரிபரம்பு பகுதியைச் சேர்ந்தவர் ஷாலினி (37). இவரது கணவர் அனீஷ் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில், ஷாலினி தனது வீட்டில் சமையலறைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்குள்ள கேஸ் சிலிண்டருக்குப் பின்னால் மறைந்திருந்த நச்சுத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக அவரைத் தீண்டியது.

பாம்பு கடித்த உடனடியாக ஷாலினி அஞ்சல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றார். இருப்பினும், மேல்சிகிச்சையை முழுமையாக முடித்துக் கொள்ளாமல் அவர் வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

   

உடனே அவர் மற்றொரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். முதற்கட்ட சிகிச்சையை அரைகுறையாக முடித்துக்கொண்டு வந்ததே உயிரிழப்பிற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.