“ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தை அறுத்த தாய்…” 3 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற குழந்தை… திருமண நாளில் கொடூரம்…! குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 11, 2026

Spread the love

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விலவூர்க்கல் பொட்டை பகுதியைச் சேர்ந்த அபிஜித் – கிறிஸ்டி தம்பதியினருக்குத் திருமணமாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அன்னா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவன் மீது கிறிஸ்டிக்கு ஏற்பட்ட சந்தேகம் மற்றும் குடும்பத் தகராறு காரணமாகக் கடந்த சில மாதங்களாகப் பிரிந்திருந்த கிறிஸ்டி, சமீபத்தில்தான் மீண்டும் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், திருமண நாளை முன்னிட்டு மதிய உணவிற்குப் பிறகு கிறிஸ்டி தனது ஒன்றரை வயதுக் குழந்தையை அழைத்துக்கொண்டு படுக்கை அறைக்குச் சென்று பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அபிஜித்தின் தாய் கதவைத் தட்டியுள்ளார். கிறிஸ்டி கதவைத் திறந்தபோது, அன்னா ரத்த வெள்ளத்தில் அசைவற்றுத் தரையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

   

“நான்தான் குழந்தையைக் கொன்றுவிட்டேன்” என கிறிஸ்டி கூறவே, கதறித் துடித்த பாட்டி குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார். ஆனால், கழுத்தில் ஏற்பட்ட ஆழமான காயத்தால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலைக்கு முயன்ற கிறிஸ்டி, தற்போது திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மலையின்கீழ் போலிஸார் கொடூரக் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.