இடைத்தேர்தலில் பாமகவின் மெகா பிளான்… பின்னணியில் ரகசிய பேச்சுவார்த்தை… கதறும் எடப்பாடி…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

By Nanthini on புரட்டாதி 11, 2026

Spread the love

வரவிருக்கும் இடைத்தேர்தலில் பாமக தனது நிலைப்பாட்டை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காதது அதிமுக தலைமைக்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பாமக, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆளும் தமிழக வெற்றிக் கழகத்துடன் மென்மையான அணுகுமுறையைக் கையாண்டு இணக்கமாகச் செயல்பட்டு வருகிறது.

பாஜக, அமமுக, ஐஜேகே உள்ளிட்ட பிற கூட்டணிக் கட்சிகள் அதிமுக வேட்பாளருக்குத் தங்கள் ஆதரவை பகிரங்கமாகத் தெரிவித்து விட்டபோதிலும், பாமக தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது. இதனிடையே, கூட்டணி அமைக்கும் முயற்சியாக தவெக தரப்பும் பாமகவை ரகசியமாக அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியாகும் தகவல்கள், தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பங்களையும் அதிமுக வட்டாரத்தில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன.