அடச்சீ… கூடுதல் வகுப்புல இதான் சொல்லி குடுப்பியாடா?… மாணவிக்கு முத்தம் கொடுத்து மாட்டிய கணினி ஆசிரியர்… ஆத்திரத்தில் தர்ம அடி கொடுத்த அண்ணன்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

By Swetha on புரட்டாதி 11, 2026

Spread the love

கோரக்பூரில், கூடுதல் வகுப்பு எடுக்கிறேன் என்ற பெயரில் தனது மாணவியிடம் அத்துமீறி முத்தமிட்ட கணினி ஆசிரியர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்டார். வகுப்பறைக்கு வெளியே காத்திருந்த மாணவியின் சகோதரரும் அவருடைய நண்பர்களும் அறைக்குள் சென்று ஆசிரியரின் செயலை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, ஆத்திரமடைந்த மாணவியின் சகோதரரும் அவருடைய நண்பர்களும் அந்த ஆசிரியரைத் தொடர்ந்து பல முறை கன்னத்தில் அறைந்தனர். அவர்கள் சரமாரியாகத் தாக்கியவுடன், நிலைகுலைந்த ஆசிரியர் உடனடியாகத் தற்காத்துக் கொள்ளும் வகையில் அந்த மாணவியை தனது சொந்த சகோதரியாகக் கருதுவதாகக் கூறி தப்பிக்க முயன்றார்.

   

https://twitter.com/ashishpaswan0/status/2097957858168258987/video/1

   

வகுப்புகள் முடிந்த பிறகும் மாணவியுடன் அந்த அறையில் தனியாக என்ன செய்து கொண்டிருந்தாய் என்று சகோதரன் கோபத்துடன் கேள்வியெழுப்பினார். அதற்கு அந்த ஆசிரியர், “இவள் என் உடன்பிறந்த சகோதரி போன்றவள்; ரக்ஷா பந்தன் அன்று எனக்கு ராக்கி கூடக் கட்டினாள். இன்று கூடுதல் படிப்புக்காகவே இங்கு தங்கியிருந்தாள்” என்று கூறி சமாளிக்கப் பார்த்தார்.