“மனைவிக்கு விருப்பம்னா காதலனோட போகட்டும்…” முடிவுக்கு வந்த 1 வருட திருமண வாழ்க்கை… காதலனுடன் சேர்த்து வைத்த கணவன்… இணையத்தில் குவியும் கமெண்ட்…!!

By Devi Ramu on புரட்டாதி 10, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் மலிஹாபாத் பகுதியைச் சேர்ந்த பி.ஆர்.டி காவலர் ஒருவருக்குக் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சில மாதங்கள் குடும்ப வாழ்க்கை நன்றாகச் சென்ற நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவி யாருக்கும் சொல்லாமல் திடீரென வீட்டை விட்டு மாயமானார்.

புகாரின் பேரில் விசாரணையில் இறங்கிய போலிசார், அந்தப் பெண்ணைக் காதலனுடன் கண்டுபிடித்து புதன்கிழமை அன்று இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். குடும்பத்தினரும் கணவனும் அந்தப் பெண்ணிற்கு எவ்வளவோ அறிவுரைகள் கூறியும், தான் காதலனுடன் மட்டுமே வாழ்வேன் என்பதில் அவர் பிடிவாதமாக இருந்தார்.

   

மனைவியின் விருப்பத்தை உணர்ந்த அந்தப் பி.ஆர்.டி காவலர், தகராறு செய்யாமல் சம்மதித்து, சட்டப்பூர்வ நடைமுறைகளை முடித்துவிட்டு மனைவியைக் காதலனுடன் சேர்த்து வைத்து வழியனுப்பி வைத்தார். இச்சம்பவம் குறித்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நெட்டிசன்கள், “நல்லவேளை டிரம் அல்லது பெட்டியில் அடைக்கப்படாமல் உயிராவது தப்பியதே, கணவரின் முடிவு தான் சிறந்தது” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.