விஜய் கொடுத்த மெகா பவர்… களமிறங்கும் புஸ்ஸி ஆனந்த்…. அதிர்ச்சியில் மாஜி எம்.எல்.ஏ-க்கள்…. பனையூரில் நடந்த இரவோடு இரவான மீட்டிங்….!

By Nanthini on புரட்டாதி 10, 2026

Spread the love

தமிழக வெற்றித் கழகத்தின் இடைத்தேர்தல் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் மிகமுக்கியப் பொறுப்பை நிர்வாகி N.ஆனந்திடம் அக்கட்சியின் தலைவர் விஜய் ஒப்படைத்துள்ளார். கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் முன்னாள் எம்.எல்.ஏ-க்களாக இருந்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த இருவரில், ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, இடைத்தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது வரும் செப்டம்பர் 14-ஆம் தேதிக்குள் வெளியாகலாம் என பனையூர் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.