ஆன்லைன் உணவு டெலிவரி தளங்களில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. ஸ்விக்கி செயலியில் ‘Toing China Panda’ என்ற உணவகத்தில் இருந்து பெண் ஒருவர் ரூ 560 செலுத்தி சில்லி பன்னீர் கிரேவி மற்றும் நூடுல்ஸ் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு வந்த உணவில் வெறும் இரண்டு துண்டு பன்னீர் மட்டுமே இருந்துள்ளது. இந்த சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிக பணம் வசூலித்துக்கொண்டு மிகக் குறைந்த அளவிலான உணவை அனுப்புவது வாடிக்கையாளர்களை வெளிப்படையாக ஏமாற்றும் செயலாகும். உணவக உரிமையாளர்களின் இத்தகைய போக்கைக் கண்காணிக்காமல், தங்களின் தளத்தின் வழியே விற்க அனுமதிப்பது சுவிக்பி நிறுவனத்தின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது. வாடிக்கையாளர் செலுத்தும் பணத்திற்கு ஏற்ற தரமான மற்றும் சரியான அளவிலான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கடமை சுவிக்பிக்கு உள்ளது.
இந்தத் தவறுக்கு சுவிக்பி நிறுவனம் உடனடியாக வாடிக்கையாளரிடம் பகிரங்க விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், இதுபோன்ற நியாயமற்ற முறையில் செயல்பட்டு வாடிக்கையாளர்களைச் சூறையாடும் ‘Toing China Panda’ உணவகத்தை சுவிக்பி செயலியிலிருந்து உடனடியாக தடை செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஏமாற்று வேலைகள் நடக்காமல் இருக்க கடுமையான விதிமுறைகளை சுவிக்பி அமல்படுத்த வேண்டும்.
