“அரசை நடத்தியது அமைச்சர்களா? மாப்பிள்ளையின் நண்பர்களா?”…. ரத்தீஷ் விவகாரத்தில் வெடித்த அமைச்சர் நிர்மல் குமார்… வெளிவந்த திடுக்கிடும் தகவல்….!

By Nanthini on புரட்டாதி 10, 2026

Spread the love

தமிழக அரசியலில் அதிகாரத் தலையீடுகள் மற்றும் கடந்த கால நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி. ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், தற்போதைய அரசு முழுமையாக மக்களுக்கான அரசாகச் செயல்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதிபடத் தெரிவித்தார். கூட்டணிக் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே உடன்பாடுகளை வைத்திருக்கும் என்றும், கம்யூனிஸ்ட் கட்சியினர் தற்போதைய ஆட்சிக்கு முழு ஆதரவு அளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு துறைகளிலும் நிர்வாகம் மிகவும் மோசமடைந்திருந்ததாகக் குற்றம்சாட்டிய அமைச்சர், கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட தவறுகளில் இருந்து மாநிலத்தை மீட்கவே தற்போதைய அரசு போராடி வருகிறது என்றார். காவிரிப் பிரச்சனை முதல் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது வரை வரலாற்று ரீதியாகச் செய்யப்பட்ட தவறுகளை இன்றைய தலைமுறைக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, 1976-இல் வழக்கு விசாரணை மற்றும் எச்சரிக்கைகளுக்குப் பிறகே கச்சத்தீவு தொடர்பான உண்மைகள் வெளிவந்தன என்றும், அன்றைய நிலையிலேயே தொலைநோக்கோடு தடுத்திருந்தால் கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழக மீனவர்கள் சந்தித்த துயரங்களைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுக் கூறினார்.

   

அரசு நிர்வாகத்தில் ‘ரத்தீஷ்’ போன்ற பவர் புரோக்கர்களின் தலையீடுகள் குறித்துப் பேசிய அமைச்சர், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகளே அரசை நடத்த வேண்டுமே தவிர, தனிநபர்களோ அல்லது குடும்ப உறவினர்களுடன் இருக்கும் நண்பர்களோ நடத்தக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பதாகவும் கூறினார். தனிப்பட்ட நபர்கள் அரசு அதிகாரிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, தவறான முறையில் வசூலில் ஈடுபட்ட அதிகார மையங்களை உடைப்பதே அரசின் முக்கிய நோக்கம் என்றும், இதுபோன்ற தவறான நடைமுறைகளை மாற்றவே காவல்துறை சட்டப்படி உரிய நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

   

டாஸ்மாக் வசூல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட அரசியல் அறிவற்ற நபர்களை வைத்து இயங்கிய பழைய சிஸ்டத்தை மாற்றி, வெளிப்படையான நிர்வாகத்தைக் கொண்டு வருவதே தங்களின் இலக்கு என்று நிர்மல் குமார் தெளிவுபடுத்தினார். மேலும், அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிப்பது குறித்து முதலமைச்சரே இறுதி முடிவு எடுப்பார் என்றும், புரையோடிப் போய் இருக்கும் பழைய நிர்வாகக் கோளாறுகளைச் சீரமைத்து மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை வழங்குவதே இந்த அரசின் முதன்மை நோக்கம் என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.