யாரை இறக்கினால் ஜெயிக்கலாம்?…. 2 தொகுதிகளுக்கும் ரகசிய ஸ்கெட்ச் போடும் மு.க.ஸ்டாலின்…. பரபரபின் உச்சத்தில் அறிவாலயம்….!

By Nanthini on புரட்டாதி 9, 2026

Spread the love

2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தவுள்ளார். குதிரை பேர புகார்கள் மற்றும் முறைகேடுகளை சுட்டிக்காட்டி, இத்தேர்தலை “ஆளுங்கட்சியால் திணிக்கப்பட்ட தேர்தல்” என திமுக தலைமை கடுமையாக விமர்சித்து வருகிறது. எனினும், கள நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, எந்தெந்த வேட்பாளர்களை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்பது குறித்து நிர்வாகிகளின் கருத்துகள் விரிவாகக் கேட்டறியப்படவுள்ளன.

இக்கூட்டத்தில் பெறப்படும் ஆலோசனைகள் மற்றும் களப்பணியாளர்களின் கருத்துகளின் அடிப்படையிலேயே, தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுவதா அல்லது வேறு ஏதேனும் அரசியல் முடிவுகளை எடுப்பதா என்பது குறித்து திமுக தலைமை இறுதி அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த தலைவர்களின் ஆலோசனைகளுக்குப் பிறகே வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் வியூகங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவுகள் எடுக்கப்படும் என்பதால், நாளைய ஆலோசனை கூட்டம் திமுக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.