கர்நாடக மாநிலம் உடுப்பியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் புகழ்பெற்ற ‘விட்லபிண்டி’ திருவிழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழாவின் போது, தமிழ்நாட்டின் முதலமைச்சரும் நடிகருமான தளபதி விஜய்யைப் போன்றே அச்சுபிசகாமல் இருக்கும் உருவ ஒற்றுமை கொண்ட நபர் ஒருவர் கலந்துகொண்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.
கருப்பு உடையில் பாதுகாப்புக் காவலர்கள் சூழ, கருப்பு நிற வாகனங்கள் முன்னால் செல்ல, விஐபி பாணியில் திறந்தவெளி வாகனத்தில் ரதபீதி பகுதி வழியாக அவர் உலா வந்தார். வீதியின் இருபுறமும் திரண்டிருந்த மக்களைப் பார்த்து கைகளை அசைத்தபடி, விஜய் பாணியிலேயே உற்சாகமாக நடனமாடினார்.
அவரை நேரில் பார்த்த மக்கள் பலரும் நிஜமான விஜய்யே விழாவிற்கு வந்துவிட்டதாகக் கருதித் தங்களது செல்போன்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்தனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், இணையவாசிகள் பலர் இது போலி விஜய் எனக் கருத்து தெரிவித்தும், நகைச்சுவையான கமெண்ட்களைப் பதிவிட்டும் வருகின்றனர்.
