காசா பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்தி வரும் கொடூரத் தாக்குதலில், பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த வாஃபா அகிலா என்ற இளம் சிறுமியும் அவரது தந்தையும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து ஃபிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எமெரிக் காரோன் தனது எக்ஸ் தளத்தில் காரசாரமாகப் பதிவிட்டுள்ளார். “பாலஸ்தீனத்தில், குறிப்பாகக் குழந்தைகள் மீது நடத்தப்படும் இந்த இனப்படுகொலை குறித்து எவரும் பேசுவதில்லை; ஆனால் கொடூரங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன” என அவர் மிகுந்த ஆதங்கத்துடன் குற்றம் சாட்டியுள்ளார்.
சிறுமியும் அவரது தந்தையும் கொல்லப்பட்ட செய்தி இணையத்தில் வெளியாகி உலக அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “மக்களின் உயிரிழப்புகளை உலகம் சாதாரண நிகழ்வாக மாற்றப் பார்க்கிறது” எனச் மனித உரிமை ஆர்வலர்களும் நெட்டிசன்களும் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
