கான்பூர் தேஹாட் பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக கஜேந்திரா என்ற இளைஞர் தனது மனைவி சப்னாவை இரும்புத் தடியால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். சப்னா தொலைபேசியில் வேறு ஒருவருடன் பேசுவது குறித்து கஜேந்திராவிற்கு ஏற்பட்ட சந்தேகமே தகராறுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, கஜேந்திரா தனது மனைவியின் தலையில் பலமாகத் தாக்கியதில் சப்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கஜேந்திரா மற்றும் சப்னா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. சப்னா இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், இத்திருமணத்திற்காக அவர் இந்து மதத்திற்கு மாறி கஜேந்திராவைத் திருமணம் செய்து கொண்டார். தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்கி சில மாதங்களே ஆன நிலையில், இந்தத் கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோட முயன்ற கஜேந்திராவை காவல்துறையினர் கைது செய்து, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
