ஐயோ… நான் செத்துப் போகல… உயிரோடதான் இருக்கேன்… 27 மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பிய பெண்… ஷாக்கில் உறைந்த குடும்பம்… லக்னோவில் அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 7, 2026

Spread the love

லக்னோவில் உயிரிழந்துவிட்டதாகக் கருதி குடும்பத்தினரால் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்ட பெண் ஒருவர், 27 மாதங்களுக்குப் பிறகு உயிருடன் வீடு திரும்பியுள்ளார். நவிகோட் நந்தனா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான சிவானி என்ற பெண், செப்டம்பர் 5 அன்று தனது தாய் வீட்டிற்குத் திரும்பியதைக் கண்டு அவரது குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஐ.ஐ.எம் சாலைக்கு பின்புறம் உள்ள வடிகாலில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதை சிவானியின் குடும்பத்தினர் அடையாளம் காட்டியதால், பைன்சாகுண்ட் பகுதியில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. மேலும், வரதட்சணை கொடுமையால் சிவானி கொல்லப்பட்டதாகக் கூறி, அவரது மாமனார் வீட்டார் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

   

தற்போது சிவானி உயிருடன் திரும்பியுள்ளதால், இந்த விவகாரம் பெரும் குழப்பத்தையும் சிக்கலையும் உருவாக்கியுள்ளது. அப்படியென்றால் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட சடலம் யாருடையது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரிப்பதற்காக காவல்துறையினர் சிவானியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.