அதிகாலையில் பயங்கரம்…! தூங்கிக்கொண்டிருந்த 15 வயது சிறுவன் மீது விழுந்த வீட்டின் கூரை…! சடலத்துடன் கிடைத்த தோட்டாக்கள்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 6, 2026

Spread the love

கிழக்கு டெல்லியின் வெல்கம் பகுதியில் செப்டம்பர் 6-ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் நெஞ்சை பதறவைக்கும் சோகச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தனது இரட்டை சகோதரனுடன் அறையில் தூங்கிக்கொண்டிருந்த 15 வயது சிறுவன் மீது, அறையின் மேற்கூரையில் இருந்த சிமெண்ட் காரை திடீரென இடிந்து விழுந்தது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர், இருவரையும் மீட்டு ஆனந்த் விஹாரில் உள்ள கைலாஷ் தீபக் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், அச்சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயமடைந்த மற்றொரு சகோதரனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றியபோது, அவனிடமிருந்து 5 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டட இடிபாட்டில் சிறுவன் உயிரிழந்த சம்பவத்துடன், சட்டவிரோத ஆயுதத் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்து டெல்லி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.