இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘GOAT’ திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இப்படத்தில் விஜய்யின் கார் நம்பர் பிளேட்டில் ‘TN 07 CM 2026’ என வெங்கட் பிரபு வைத்திருந்தது, விஜய் 2026 தேர்தலில் வென்று முதலமைச்சரானதன் மூலம் நிஜமாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், படத்தின் 2-ஆம் ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட பிரத்யேக வீடியோவில் நாடாளுமன்றக் கட்டடம் இடம்பெற்றிருந்ததால், விஜய் அடுத்ததாகப் பிரதமராவார் என்பதை வெங்கட் பிரபு கணித்துள்ளாரா என இணையத்தில் பேச்சுகள் கிளம்பின.
இதனிடையே, சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் வெங்கட் பிரபுவிடம், கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் திடீரென “GOAT 2 எப்போ அண்ணா வரும்?” என்று உரக்கக் கேட்டார். எதிர்பாராத கேள்வியால் பதறிய வெங்கட் பிரபு, “அட சும்மா இருப்பா!” என்பது போல் ஜாலியாக ரியாக்ஷன் கொடுத்துவிட்டு அங்கிருந்து சிரித்தபடியே நழுவிச் சென்றார். இந்த நகைச்சுவையான சம்பவம் தொடர்பான செய்தி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
