சமூக வலைத்தளமான X பக்கத்தில் முதியவர் ஒருவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் இடையே நடந்த கை கலப்பு வீடியோ ஒன்று வைரலாகி பெரும் சிரிப்பலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வயதானவர் என்பதால் எளிதில் மிரட்டிவிடலாம் என்று நினைத்து, இளைஞர் ஒருவர் பெரியவரிடம் ஆத்திரத்துடன் சண்டைக்குச் சென்றுள்ளார். ஆனால், வயதானாலும் தனக்குத் தெம்பு குறையவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அந்த முதியவர் துணிச்சலாக எதிர்த்து நின்று இளைஞருடன் கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளார்.
சண்டையின் இறுதியில் பெரியவரைக் குறைக்க மதிப்பிட்ட அந்த இளைஞன், நிலைதடுமாறித் தரையில் விழுந்து அடிவாங்கியுள்ளார். “யாரையும் அவர்களின் வயதை வைத்து பலவீனமானவர் என்று தவறாக எடைபோட்டு வம்புக்குச் செல்லாதீர்கள்; ஆத்திரத்தில் தொடங்கும் சண்டை ஆபத்தில் தான் முடியும்” என்ற கருத்துடன் பதிவிடப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
