CM விஜய்யின் அந்த ஒரு அறிவிப்பு… உச்சக்கட்ட கோபத்தில் ராகுல்?…. உடையும் நிலையில் தவெக கூட்டணி?…. அடுத்த பரபரப்பு…!

By Nanthini on புரட்டாதி 6, 2026

Spread the love

தமிழ்நாட்டின் முக்கிய வழக்குகளுக்காக உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் பட்டியலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் பெயர் இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசு எடுத்த இந்த முடிவு குறித்து தங்களுக்கு முன் கூட்டியே எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பதால், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் விஜய் மீது தீவிர அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

   

முன்னறிவிப்பின்றி வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு கூட்டணிக்குள் உராய்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 9 அன்று நடைபெறவுள்ள தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.