“யாரும் பசியோடு தூங்கக்கூடாது…” 13 வயதிலேயே 25,000 பீட்சாக்களை… வழங்கி அமெரிக்காவையே அதிரவைத்த… சிறுமியின் வைரல் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 6, 2026

Spread the love

அமெரிக்காவில் வசிக்கும் 13 வயது சிறுமி ஆஷ்ரிதா காசா மற்றும் அவரது சகோதரர் அனிஷ் ஆகியோர் இணைந்து, வறுமையால் வாடும் குடும்பங்களுக்கு உணவு வழங்க ஒரு தொண்டு செயலியை உருவாக்கியுள்ளனர். சமுதாயத்தில் பசியால் வாடும் சிறுவர்கள் மற்றும் முதியவர்களை நேரில் கண்டு உணர்ந்த இவர்கள், தொழில்நுட்பத்தின் மூலம் பசிப் பிணியை தீர்க்க முடிவு செய்தனர்.

இதற்காக ‘Pizza for a Purpose’ என்ற செயலியை உருவாக்கி, அதன் மூலம் நன்கொடையாளர்கள், உணவகங்கள் மற்றும் உள்ளூர் தொண்டு நிறுவனங்களை இணைத்துள்ளனர். இந்த செயலி வழியாக நன்கொடையாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள உணவகங்களைத் தேர்ந்தெடுத்து, தேவைப்படும் மக்களுக்கு நேரிடையாகச் சுடச்சுட பீட்சா உணவை வழங்க முடியும்.

   

கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்த செயலி மூலம் புளோரிடாவின் புரோவார்ட் கவுண்டி உள்ளிட்ட பகுதிகளில் பசியால் வாடிய குடும்பங்களுக்கு 25,000-க்கும் மேற்பட்ட பீட்சா துண்டுகள் வெற்றிகரமாக வழங்கி விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அமெரிக்காவில் பசியால் தவிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு உதவி செய்து, இந்த சிறுமி உலகளவில் பெரிய பாராட்டைப் பெற்று வருகிறார்.