அட கடவுளே… வயித்துக்குள்ள 3 பிளேடா?… 16 வயது சிறுவனை போராடி… காப்பாற்றிய மருத்துவர்கள்… ஹைதராபாத்தில் ஷாக்கிங் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 6, 2026

Spread the love

ஹைதராபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன், பல கூர்மையான ரேசர் பிளேடுகளை விழுங்கியதால் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிறுவனின் வயிற்றில் இருந்த ஆபத்தான பிளேடுத் துண்டுகளை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டிய சவாலான சூழ்நிலை மருத்துவர்களுக்கு ஏற்பட்டது.

ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள், அந்த சிறுவனின் வயிற்றில் இருந்த மூன்று ரேசர் பிளேடுத் துண்டுகளையும் வெற்றிகரமாக வெளியேற்றினர். எக்ஸ்ரே பரிசோதனையின் மூலம் பிளேடுத் துண்டுகள் வயிற்றில் இருப்பது கண்டறியப்பட்டது. குடல் பகுதியில் காயம் அல்லது துளை ஏற்படும் அபாயம் இருந்ததால், மருத்துவர்கள் மிகவும் கவனமாக ‘எண்டோஸ்கோபி’ சிகிச்சை முறை மூலம் அவற்றை அகற்றினர்.

   

குறைந்தபட்ச ஊடுருவல் சிகிச்சை முறையான எண்டோஸ்கோபி மூலம் வெற்றிகரமாக பிளேடுகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, சிறுவன் ஆபத்தின்றி நலமுடன் குணமடைந்து வருகிறான்.