நேபாளத்தின் பெட்ராவதி பகுதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு பேரழிவின் போது, வீடுகள் இடிந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய 60 வயது மூதாட்டி ஒருவர் 10-11 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
நேபாளத்தின் ஆயுதக் காவல் படை மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்திய தீவிர தேடுதல் வேட்டையின் போது, இந்த மூதாட்டி இடிபாடுகளுக்கு நடுவே உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்டார். ஆபத்தான சூழ்நிலையிலும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காப்பாற்றி வரும் பாதுகாப்புப் படையினருக்குச் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
“நம்பிக்கை ஒருபோதும் பொய்ப்பதில்லை” என்றும், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மற்றவர்களும் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்றும் நேபாள நாட்டு மக்களும் நெட்டிசன்களும் பிரார்த்தனைகளைத் தெரிவித்து வருகின்றனர்.
