பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது வழக்கு தொடர்ந்ததன் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்டவர் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா. டிஎன்ஏ பரிசோதனைக்குப் பின் குழந்தைக்குத் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்பது உறுதி செய்யப்பட்டு, சமீபத்தில் இருவரும் இணைந்து குழந்தையின் காதுகுத்து விழாவையும் நடத்தினர்.
இந்நிலையில், விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் சீசன் 10’ போட்டியில் ஜாய் கிரிஸில்டா கலந்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாகப் பரவியது. இதைக் கண்ட நெட்டிசன்கள் சிலர், “பிக் பாஸ் வாய்ப்பு மற்றும் பப்ளிசிட்டிக்காகத்தான் இதையெல்லாம் செய்தாரா?” எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனக்கு வாய்ப்பளித்த விஜய் டிவிக்கு நன்றி. ஆனால் எனது குழந்தை இன்னும் மிகவும் சிறியவன் என்பதால் அவன்தான் எனக்கு முக்கியம். எனவே இந்த ஆஃபரை நான் மரியாதையுடன் மறுத்துவிட்டேன்” எனத் தெரிவித்து விமர்சனம் செய்தவர்களின் வாயை அடைத்துள்ளார்.
