“125 ஆண்டுகளில் இல்லாத அளவு…” அடுத்த ஆண்டு வரை தொடரும் எல்நினோ… உலக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

By Devi Ramu on புரட்டாதி 5, 2026

Spread the love

மத்திய மற்றும் கிழக்கு வெப்ப மண்டல பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வெப்ப உயர்வின் காரணமாகத் தோன்றும் ‘எல்நினோ’ காலநிலை நிகழ்வு, உலகளவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. தற்போது நிலவும் இந்த எல்நினோ அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் என உலக வானிலை ஆய்வு மையம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எல்நினோ தாக்கத்தால் இந்தியாவில் மழைப்பொழிவு பெருமளவில் குறையும் என்றும், இதன் காரணமாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் 1901-ம் ஆண்டிற்குப் பிறகு மிகக் கடுமையான வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் நாட்களில் வழக்கமான பருவமழை குறைந்து வறட்சி மற்றும் தீவிர வெப்ப அலைகள் வீசக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

   

இதன் விளைவாக இந்தியாவில் வழக்கமான குளிர்காலம் சுருங்கி, வழக்கத்திற்கு மாறாகக் கடுமையான வெப்பம் நிலவும் என காலநிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உலக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் இந்த எல்நினோ பெருத்த அடியைக் கொடுக்கும் என்பதால் சூழலியல் ஆர்வலர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.