சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஏசியன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நள்ளிரவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகப் புகைமூட்டம் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள், உடனடியாகச் செயல்பட்டு பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.
சிசிடிவி காட்சிகளில் பதிவான இந்தத் துரித நடவடிக்கையின் மூலம், என்.ஐ.சி.யு பிரிவில் இருந்த ஒன்பது குழந்தைகள் உட்படப் பல நோயாளிகள் எவ்விதப் பாதிப்புமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/HateDetectors/status/2095765030465843571/video/1
மருத்துவமனையின் மின் கட்டமைப்பு மற்றும் தீயணைப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்தச் சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இதற்கான சரியான காரணம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
