ஏய்… அந்தப் பக்கம் போகவே கூடாது… பட்டாயாவின் இரவுக் கேளிக்கை விடுதிகளுக்குள்… நுழைந்த அமெரிக்கக் கடற்படை… வீரர்களுக்கு அதிரடித் தடை…!

By Swetha on புரட்டாதி 5, 2026

Spread the love

தாய்லாந்தின் பட்டாயா நகருக்கு ‘யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன்’ விமானம் தாங்கிக் கப்பல் வருகை தந்துள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்க கடற்படை வீரர்கள் இரவு நேரங்களில் சோய் 6 மற்றும் சோய் 7 போன்ற முக்கிய பொழுதுபோக்கு மற்றும் வயது வந்தோருக்கான இரவு நேரப் பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடைக்கான முக்கியக் காரணமாக, இந்தப் பகுதிகளில் ஏராளமான மதுக்கூடங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் குவிந்துள்ளதால் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதுடன், தேவையற்ற பாதுகாப்புச் சிக்கல்களைத் தவிர்க்கவும், வீரர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் அமெரிக்க இராணுவம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

   

https://www.instagram.com/reel/Dc1V_eRuZkJ/?utm_source=ig_web_button_share_sheet

   

இருப்பினும், இந்தத் தடையானது வீரர்கள் பட்டாயா நகரின் மற்ற பொதுவான சுற்றுலாத் தலங்கள் மற்றும் ‘வாக்கிங் ஸ்ட்ரீட்’ போன்ற இடங்களை இரவு 2 மணி வரை பார்வையிட அனுமதி வழங்குகிறது. மேலும், பாதுகாப்பு மற்றும் ஒழுக்க நெறிமுறைகளைக் காக்க கஞ்சா கடைகள் மற்றும் சில நீர் விளையாட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.